Home ஆன்மிகம் நவராத்திரி இரண்டாம் நாள்: குழந்தை வரம் அருளும் தேவி பிரம்மசாரிணி!

நவராத்திரி இரண்டாம் நாள்: குழந்தை வரம் அருளும் தேவி பிரம்மசாரிணி!

ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புதத் தருணமே இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அது மிகையாகாது. ஆயிரம் கதைகளை சொல்லும் பொம்மைகளை குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை விரும்பாதவர்களே கிடையாது. பெண் குழந்தைக்கு பர்பி கேள் என்றால், ஆண் குழந்தைக்கு கார் பொம்மை, கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு குழந்தை வடிவம் கொண்ட பொம்மை

அந்தளவுக்கு உணர்வுகளோடு கலந்திருக்கும் பொம்மைகளை வைத்து கொண்டாடும் விழா. நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று அம்பிகையை மூன்று வயது பெண் குழந்தையாகப் பாவித்துப் பூஜிக்கவேண்டும். கொலுவில் வீற்றிருக்கும் அம்பிகையை திரிபுரா அல்லது வராஹி என்ற பெயருடன் இன்று வழிபட வேண்டும். நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கை பிரம்மசாரிணி தேவியாக வணங்கப்படுகிறது.

அம்பிகைக்கு கோதுமை மாவால் கட்டம் கோலம்போட்டு, ஜவ்வாதால் பொட்டு வைத்து, முல்லைப் பூ மாலை அணிவித்து, முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் படைத்து, நைவேத்தியமாக புளியோதரையை படைத்து, மகாவிஷணுக்கு உகந்த துளசியைக் கொண்டு அம்பிகைக்கு அர்ச்சனை செய்து குமாரி திரிபுராவை வணங்க வேண்டும். ஏதாவது நவதானியத்தில் செய்த சுண்டலை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து, அதை வீட்டிற்கு வரும் பெண்களுக்கு தாம்பூலத்துடன் சேர்த்து அளிக்க வேண்டும்.

இவ்வாறாக இரண்டாம் நாளில், அம்பிகையை வழிபட்டால் தனம், தானியம் மட்டுமின்றி குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிட்டும். துர்க்கை பிரம்மசாரிணிக்கான அர்த்தம் ‘பிரம்ம’ என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். அம்பிகை மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலதுக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது. இந்த துர்க்கைக்கு வாகனம் ஏதும் இல்லை. பூமியில் நடப்பவளாக இவள் காட்சிபடுத்தப்படுகிறாள்.சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக கடும் தவம் புரிந்தார். இவரின் தவ உக்கிரம் மூன்று உலகங்களையும் உலுக்கியது. இறுதியில் சிவ பெருமான் பிரம்மசாரிணியைத் திருமணம் புரிந்தார் என்று புராணங்கள் கூறுகிறது.

அறிவு, ஞானம், நன்றி நிறைந்த பிரம்மச்சாரிணியை வணங்குவதன் மூலம் பொறுமையைத் தர வல்லவள். அதோடு சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரவல்லவர். துன்பமான நேரத்திலும் மணம் தளராது இருக்க அருள்பவள். மனித உடலில் உள்ள முக்கியமான ஏழு சக்ரங்களில், உணர்வுகளோடு தொடர்புடைய ‘ஸ்வாதிஷ்தானம்’ சக்ரத்தில் இருப்பவள். இரண்டாம் நாள் யோகிகள் இவளின் அனுகிரகத்தால் இந்த சக்ரத்தை அடைவர். இவளுக்கான மந்திரம்!

ததாநகர பத்மபியம் அக்ஷமாலா கமண்டலம்

தேவி பிரசிதட்டு மயி பிரம்மசாரின நுத்தன

கமண்டலமும், தண்டமும் தன் தாமரைக் கரத்தில் ஏந்தியவளும் பிரம்மஸ்வரூபம் அடையும் எண்ணம் கொண்டவளுமாம் அன்னை பிரம்மச்சாரிணி எனக்கு அருள வேண்டும் என்று அர்த்தமாகும். இவளுக்கான கோயில் பாரத தேசத்தின், தென்மாநிலத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரில் அன்னை பிரம்மச்சாரிணியாக அருள் புரிகிறாள். நவராத்திரின் இரண்டாம் நாளான இன்று ஞாயிறு கிழமை என்பதால், சூரிய பகவானுக்கு உரிய மாணிக்கம் பாடலை பாடித் பூஜையை தொடங்கலாம்.
மாணிக்கத்திற்கான பாடல்! காணக் கிடையா கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே பூணக்கிடையாப் பொலிவானவளே புனையக் கிடையாப் புதுமைத்தவள் நாணித்திரு நாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே..

  • வித்யா ராஜா

மாவட்ட செய்திகள்

Most Popular

ஊட்டி- அரசு சத்துணவு கூடங்களுக்கு தீயணைப்பு கருவிகள் வழங்கிய ஆட்சியர்

ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் 12 அரசு சத்துணவு மையங்களுக்கு தீ அணைக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று வழங்கினார். இதன்படி, நஞ்சநாடு,...

“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” : நடிகை குஷ்பு

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என நடிகையும் பாஜக ஆதரவாளருமான நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு நேரில் ஆறுதல்...

திண்டுக்கல்- கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு

திண்டுக்கல் மத்திய அரசின் ஜல்ஜீவன் குடிநீர் திட்ட கட்டணத்தை 3 ஆயிரத்தில் இருந்து ஆயிரம் ரூபாயாக குறைக்க வலியுறுத்தி நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட்...

இளைஞனை நண்பர்களே பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்!

மதுரை அருகே மது போதையில் ஒரு இளைஞரை அவரது நண்பர்களே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் கூலபாண்டி...
Do NOT follow this link or you will be banned from the site!