1 லட்சம் பேரை கொரோனாவால் இழந்த இரண்டாம் நாடு!

 

1 லட்சம் பேரை கொரோனாவால் இழந்த இரண்டாம் நாடு!

சீனாவில் தன் கோர தாண்டவத்தை சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று, இன்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வில்லை என்பதே கவலை அளிக்கும் செய்தி.

ஆகஸ்ட் 12-ம் தேதி ரஷ்யா நாடு உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யவிருக்கிறது. அது முழு பலனை அளிக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்கூட.

1 லட்சம் பேரை கொரோனாவால் இழந்த இரண்டாம் நாடு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியைத் தொடவுள்ளது. இதில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.

உலகின் மாபெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனாவின் மொத்தப் பாதிப்பு 51 லட்சத்து 50 ஆயிரத்து 60 பேர். இவர்களில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 74 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள்.

தற்போது ஒரு லட்சம் பேரை கொரோனாவால் இன்னொரு நாடும் இழந்துவிட்டது. அது பிரேசில்.

1 லட்சம் பேரை கொரோனாவால் இழந்த இரண்டாம் நாடு!

பிரேசில் நாட்டில் கொரோனாவின் மொத்தப் பாதிப்பு 30 லட்சத்து 13 ஆயிரத்த் 369 பேர். இவர்களில் குணம் அடைந்தவர் 20 லட்சத்து 94 ஆயிரத்து 293 பேர். இறந்தவர்களின் எண்ணிக்கை 1,00,543 பேர்.

1 லட்சம் பேரை கொரோனாவால் இழந்த இரண்டாம் நாடு!

மார்ச் 16-ம் தேதிதான் பிரேசிலின் முதல் நபர் கொரோனாவால் இறந்தார். ஏப்ரல் 10-ம் தேதி இறப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது. அதன்பின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டால் முடியவில்லை. ஆகஸ்ட் 8-ம் தேதி இறந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டுவிட்டது. நான்கு மாதக் கால இடைவெளியில் ஒரு லட்சம் பேரை கொரோனா பலி வாங்கி விட்டது.