மும்பை கிரவுண்டில் தோனியின் பெயரில் இருக்கை – அஜித் அகர்கர் சொல்வது இதுதான்

 

மும்பை கிரவுண்டில் தோனியின் பெயரில் இருக்கை – அஜித் அகர்கர் சொல்வது இதுதான்

2011 ஆம் ஆண்டு உலககோப்பையில் இறுதிப்போட்டி. இந்தியாவும் இலங்கையும் மோதிக்கொள்கின்றன.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களால் போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானம் நிரம்பி வழிந்தது. கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சியின் வழியே போட்டியை ஆவலோடு பார்த்துகொண்டிருந்தனர்.

மும்பை கிரவுண்டில் தோனியின் பெயரில் இருக்கை – அஜித் அகர்கர் சொல்வது இதுதான்
(Photo by Satish Bate/Hindustan Times via Getty Images)

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 274 ரன்களைக் குவித்திருந்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல், டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார் என்றால், நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 18 ரன்களோடு அவுட்டானதில் ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர்.

கவுதம் கம்பீர் நிலைத்து ஆடி. 97 ரன்கள் எடுத்தார். அடுத்து தோனி, தனது அதிரடி ஆட்டத்தால் 79 பந்துகளில் 91 ரன்களை எடுத்து அணியை வெற்றிபெற வைத்து உலககோப்பை தட்டிச் செல்லவும் வைத்தார்.

மும்பை கிரவுண்டில் தோனியின் பெயரில் இருக்கை – அஜித் அகர்கர் சொல்வது இதுதான்

அதுவும் 48 வது ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றியைச் சுவைத்தார் தோனி. அப்போது அவர் அடித்த பந்து மைதானத்தில் மேற்கூரையில் பட்டு ஓர் இருக்கையில் விழுந்தது. அந்த இருக்கைக்கு தோனியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை இப்போது எழுந்துள்ளது.

இது தொடர்பாக, எம்.சி.ஏக்கு மும்பை கிரிக்கெட் சங்க கவுன்சில் உறுப்பினர் அஜிங்ய நாயக் கடிதம் எழுதியிருக்கிறார்.

மும்பை கிரவுண்டில் தோனியின் பெயரில் இருக்கை – அஜித் அகர்கர் சொல்வது இதுதான்
MANCHESTER, UNITED KINGDOM – AUGUST 30: Ajit Argakar of India celebrates taking the wicket of Kevin Pietersen of England during the Fourth NatWest Series One Day International Match between England and India at Old Trafford on August 30, 2007 in Manchester, England. (Photo by Shaun Botterill/Getty Images)

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர், தோனியின் பெயரை இருக்கைக்குச் சூட்டுவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

தோனியின் அந்தப் புகழ்பெற்ற ஷாட்டைப் பார்த்தபிறகு அந்த இருக்கைக்கு தோனியின் பெயரைச் சூட்டுவதற்கு எவரும் மறுக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் 28 வருடங்களுக்குப் பிறகு உலககோப்பை இந்தியாவுக்கு கிடைத்த அற்புதம் நடந்த நாள்’ என்பதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.