அடேங்கப்பா.. சீமானின் ஆண்டு வருமானம் இதுதாங்க; ஒருவழியா சொல்லிட்டாரு!!

 

அடேங்கப்பா.. சீமானின் ஆண்டு வருமானம் இதுதாங்க; ஒருவழியா சொல்லிட்டாரு!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக – அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது முதல்வர் வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை நடத்தி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1,000 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அவரது தினசரி வருமானம் 2 ரூபாய் 77 பைசாவா என்று சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

அடேங்கப்பா.. சீமானின் ஆண்டு வருமானம் இதுதாங்க; ஒருவழியா சொல்லிட்டாரு!!

இதையடுத்து சீமானின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய். அதற்கான அவர் செலுத்திய வரி தொகை ரூ.1,000 என்பது தான் தவறாக பதிவிடப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டு மீண்டும் புதிய பிராமணப் பத்திரத்தை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தாக்கல் செய்தனர்.

அடேங்கப்பா.. சீமானின் ஆண்டு வருமானம் இதுதாங்க; ஒருவழியா சொல்லிட்டாரு!!

இந்நிலையில் புதிய பிராமணப் பத்திரத்தில் சீமானின் ஆண்டு வருமானம் ரூ. 4,72,900 என குறிப்பிடப்பட்டு புதிய பிரமாணப்பத்திரம் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. முன்னதாக சீமானின் அசையும் சொத்து மதிப்பு ரூ.94.31 லட்சம் , அசையா சொத்து ரூ.87.30 லட்சமாகும். அத்துடன் அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1.81 கோடி என்று வேட்புமனு தாக்கலில் குறிப்பிடப்பட்டிருந்தது.