கொளத்தூரில் இருந்து திருவொற்றியூருக்கு தாவியது ஏன்? சீமான் விளக்கம்!!

 

கொளத்தூரில் இருந்து திருவொற்றியூருக்கு தாவியது ஏன்? சீமான் விளக்கம்!!

மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன் என சீமான் விளக்கமளித்துள்ளார்.

கொளத்தூரில் இருந்து திருவொற்றியூருக்கு தாவியது ஏன்? சீமான் விளக்கம்!!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக , திமுக போன்ற தமிழக கட்சிகள் தீவிரமாக தேர்தல் களத்தில் பணியாற்றி வருகின்றன. இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த மார்ச் 7-ம் தேதி 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார். பெண் வேட்பாளர்கள் 117 , ஆண் வேட்பாளர்கள் 117 பேரும் நாம் தமிழர் கட்சி சார்பில் களம்காணவுள்ளனர்.அத்துடன் தேர்தலுக்கு முன்பே ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் அறிவித்திருந்தார். ஆனால் வேட்பாளர்கள் அறிவிப்பு சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டது. இதை திமுகவினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

கொளத்தூரில் இருந்து திருவொற்றியூருக்கு தாவியது ஏன்? சீமான் விளக்கம்!!

இந்நிலையில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன் என சீமான் விளக்கமளித்துள்ளார். எண்ணூரில் அதானியுடைய துறைமுக விரிவாக்க திட்டத்தால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மீனவர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நீதி வேண்டும். எனக்கு ஓட்டைக் கேட்பதை விட நாட்டைக் காப்பது தான் முக்கியம். அந்த பிரச்னையை தீர்க்க மக்களிடம் அதை பற்றி பேச வேண்டும். அதனால் தான் அந்த தொகுதியை தேர்வு செய்தேன். நான் நினைத்தால் காரைக்குடியில் போட்டிட்டிருப்பேன். அந்த மண்ணின் மைந்தனாக பாஜக, காங்கிரஸை தோற்கடித்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.