வாக்குச்சாவடியில் கிடந்த மர்ம பேப்பர்… அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் சலசலப்பு!

வாக்குச்சாவடியில் கிடந்த மர்ம பேப்பர்… அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் சலசலப்பு!

விராலிமலை தொகுதி 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அங்கு கடந்த இருமுறையாகப் போட்டியிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அங்கு போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் திடீர் சலசலப்பு எழுந்துள்ளது.

வாக்குச்சாவடியில் கிடந்த மர்ம பேப்பர்… அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் சலசலப்பு!

விராலிமலை தொகுதி மாத்தூர் பகுதியில் உள்ள 27ஆவது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட ஏஜெண்டுகளின் கையெழுத்துகளுடன் கூடிய பேப்பர் சீல் ஒன்று வாக்கு எண்ணும் மையத்தில் கிடந்தது. திமுக, அமமுக வேட்பாளர்களும் பூத் ஏஜெண்டுகளும் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்ட அவர்கள், இது தொடர்பாக மாவட்டத் தேர்தல் அலுவலர் புகார் தெரிவித்தனர்.

வாக்குச்சாவடியில் கிடந்த மர்ம பேப்பர்… அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் சலசலப்பு!

இதுதொடர்பாக விளக்கமளித்த மாவட்ட தேர்தல் அலுவலர், “வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக வாக்குச்சாவடியில் ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நத்தப்படும். அப்போது, விவிபேட் கருவியில் இருந்து சேகரிக்கப்படும் வாக்குச்சீட்டுகளை ஒரு கவருக்குள் வைத்து, அதன் மீது ஏஜெண்டுகளின் கையெழுத்துகளுடன் கூடிய பேப்பர் சுற்றப்பட்டு சீல் வைக்கப்படும். அந்த பேப்பர் சீல்தான் தவறுதலாக இங்கு கிடந்துள்ளது. இதற்கும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை” என விளக்கம் அளித்தார். இதை ஏற்க மறுத்தனர் இருதரப்பினரும். உடனே வாக்கு இயந்திரங்கள் இருக்கும் அறைக்குச் சென்று அவர்களிடம் காட்டப்பட்டது. அதற்குப் பின்பே அவர்கள் சமாதானம் ஆனார்கள்.