முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதில் தவறில்லை – அண்ணாமலை

 

முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதில் தவறில்லை – அண்ணாமலை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 450 பேர் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதில் தவறில்லை – அண்ணாமலை

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நடிகர் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் வரலாற்று படத்தில் நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும், அதில்‌ அரசியலை கலப்பது சரியல்ல என்றும் கூறினார். மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா? என்பதை அகில இந்திய தலைமையும், தமிழக தலைமையுமே முடிவு செய்யும் என்றும் கூறிய அண்ணாமலை, வரும் சட்டமன்ற தேர்தலில் தலைமை உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறினார். மேலும்,
சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று தமிழக கட்சிகள் பாஜகவை பொய் பிரசாரம் செய்வதாகவும், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய மரியாதையை செய்வதில் பாஜக தவறியது இல்லை என்றும் அவர் கூறினார்.

முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதில் தவறில்லை – அண்ணாமலை