மெரினா கடற்கரையில் சிற்பங்கள் : முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்!

மெரினா கடற்கரையில் சிற்பங்கள் : முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்!

சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு உலோகங்களினால் ஆன சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. வில்லிவாக்கம் ,திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பயன்படாத உலோக கழிவுகள் மூலம் கடல் வாழ் உயிரினங்களின் மூலம் உருவாக்கப்பட்ட வடிவங்கள் சிற்பமாக வைக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் சிற்பங்கள் : முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்!

நண்டு, இறா,ல் சுறா மீன் உள்ளிட்ட சிற்பங்கள் மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. வாகன ஓட்டிகள், நடை பயிற்சி மேற்கொள்வோர் இந்த சிற்பங்களுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

மெரினா கடற்கரையில் சிற்பங்கள் : முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்!

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் பயன்படுத்தப்படாத இரும்பு கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள கடல்வாழ் உயிரின சிற்பங்களை காரில் சென்றவாரே பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . சென்னை மாநகராட்சியின் இந்த புதிய முயற்சி தமிழக அரசு மட்டுமல்லாது பொதுமக்கள் தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.