கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; குடியிருப்புகளை அலை இழுத்துச் சென்றதால் அச்சத்தில் மக்கள்!

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; குடியிருப்புகளை அலை இழுத்துச் சென்றதால் அச்சத்தில் மக்கள்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, கோவை மற்றும் நீலகிரியில் கனமழை பெய்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அந்த 3 மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் விடுத்திருந்தது. அதனால் அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி மாற்றம் தேவாலா பகுதியில் மழை தொடர்ந்து வருகிறது. தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இன்று காலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; குடியிருப்புகளை அலை இழுத்துச் சென்றதால் அச்சத்தில் மக்கள்!

இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இன்று காலை ஹெலன் நகர் பகுதியில் உள்ள மீனவ குடியிருப்புகளை கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.