கமலுக்கு நாமத்தை போட்ட எஸ்டிபிஐ… சட்டென்று வெளியான அமமுக உடனான தொகுதி பங்கீடு!

கமலுக்கு நாமத்தை போட்ட எஸ்டிபிஐ… சட்டென்று வெளியான அமமுக உடனான தொகுதி பங்கீடு!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளர்களைத் தேடாமல் அதற்குப் பதிலாக கூட்டணிக்கு கட்சிகளைச் சேர்த்து அவர்கள் மூலம் வேட்பாளர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். எங்கே கூட்டணி முறிந்தாலும், முறிந்ததாக ரூமர் கிளம்பினாலும் அங்கே ஒரு துண்டை போட்டுவிடுகிறார். அந்த வகையில் கடந்த மக்களவை தேர்தலில் அமமுகவுடன் எஸ்டிபிஐ கட்சி இணைந்திருந்தது.

கமலுக்கு நாமத்தை போட்ட எஸ்டிபிஐ… சட்டென்று வெளியான அமமுக உடனான தொகுதி பங்கீடு!

அக்கட்சியுடனும் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். எடுத்த எடுப்பிலேயே அதிக தொகுதிகள் ஒதுக்குவதாக கமல் கூறியதாகத் தெரிகிறது. அதனால் எஸ்டிபிஐ திக்குமுக்காடிப் போனதாகக் கூறப்படுகிறது. அவ்வளவு வேட்பாளர்களுக்கு நான் எங்க போவேன் என்று கூறி துண்டை காணும் துணியைக் காணும் என்று ஓடிவிட்டதாகவும் தகவல் வெளியாகியது.

கமலுக்கு நாமத்தை போட்ட எஸ்டிபிஐ… சட்டென்று வெளியான அமமுக உடனான தொகுதி பங்கீடு!

இச்சூழலில் திடீரென்று அமமுகவுடன் தொகுதிப் பங்கீடு செய்துவிட்டதாக புதிய அறிவிப்பு வெளிவந்து ஷாக் கொடுத்துள்ளது. இந்த ஷாக் கமலுக்கு எப்படி இருக்கும் என்பது கற்பனைக்கு விடப்படுகிறது. ஆலந்தூர், அம்பத்தூர், திருச்சி மேற்கு, திருவாரூர், மதுரை மத்திய தொகுதி, பாளையங்கோட்டை ஆகிய ஒரு தொகுதிகள் எஸ்டிபிஐ கட்சிக்கு அமமுக ஒதுக்கியுள்ளது.