இப்பம் இருக்கும் அக்கறை அப்பம் ஏன் இல்லை?.. ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த சிந்தியா

இப்பம் இருக்கும் அக்கறை அப்பம் ஏன் இல்லை?.. ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த சிந்தியா

இப்போது என் மீது இருக்கும் அக்கறை நான் காங்கிரசிலில் இருந்த போது இருந்திருந்தால் சூழ்நிலை மாறியிருக்கும் என்று ராகுல் காந்திக்கு ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கட்கிழமையன்று இளைஞர் காங்கிரஸ் பிரிவு நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது: காங்கிரசுடன் இருந்திருந்தால் அவர் (ஜோதிராதித்ய சிந்தியா) முதல்வராகி இருக்கலாம். ஆனால் சிந்தியா பா.ஜ.க.வில் பேக் பெஞ்சராகி விட்டார். காங்கிரஸ் தொண்டர்களுடன் பணியாற்றி கட்சியை வலுப்படுத்தும் வாய்ப்பு சிந்தியாவுக்கு இருந்தது.

இப்பம் இருக்கும் அக்கறை அப்பம் ஏன் இல்லை?.. ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த சிந்தியா
ஜோதிராதித்ய சிந்தியா

ஒரு நாள் நீங்கள் முதல்வர் ஆவீர்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் வேறோரு பாதையை தேர்வு செய்து விட்டார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அங்கு (பா.ஜ.க.) அவர் போதும் முதல்வராக முடியாது. அதற்காக அவர் இங்கு மீண்டும் திரும்பி வருவார். இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார். இதற்கு ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி கொடுத்துள்ளார்.

இப்பம் இருக்கும் அக்கறை அப்பம் ஏன் இல்லை?.. ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த சிந்தியா
சோனியா, ராகுல் காந்தி

பா.ஜ.க. எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா இது தொடர்பாக கூறுகையில், நான் காங்கிரசில் இருந்தபோது ராகுல் காந்தி இப்போது போலவே அக்கறை கொண்டிருந்திந்தால், இது வேறு சூழ்நிலையாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார். ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க.வில் இணைவதற்கு ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒரு கஷ்டத்தில் இருந்தார். அவருக்கு பல மாதங்களாக சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தியை சந்திக்க வாய்ப்பு வழங்கவில்லை என்று சிந்தியாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.