தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்

 

தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு பரவியத் தொடங்கியதும் முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கிட்டத்தட்ட பள்ளிகள் மூடப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆகியும், திறப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாகவும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் குறுகிய காலத்தில் பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்க முடியாது என்பதால் 30 முதல் 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது.

தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்றும் முழுமையாக கல்விக்கட்டணம் வசூலிக்கப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், இதுவரை அரசு பள்ளிகளில் 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளதாகவும் செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் 15 இடங்களில் தொடக்க பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப்பள்ளிகளும் தொடக்கப்படும் என்றும் தெரிவித்தார்.