தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு… அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு… அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு… அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. ஒன்றரை ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் மாணவர்கள் வகுப்புகளை கவனித்து வந்த நிலையில் தற்போது நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் மூடப்படுமா என்று கேள்வி எழுந்தது. இருப்பினும் ஊரடங்கு நீட்டிப்பை உறுதி செய்த தமிழக அரசு பள்ளி, கல்லூரிகள் மூடல் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.இதன் காரணமாக விரைவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு… அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!

இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில்,
“தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து 15ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பள்ளிக் கல்வித்துறை அறிக்கை தந்த பிறகு பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவு எடுப்பார் . நீட் தேர்வு ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.