பாகிஸ்தானில் பள்ளிகள் திறக்கப்பட்டன – கட்டுக்குள் வந்த கொரோனா

 

பாகிஸ்தானில் பள்ளிகள் திறக்கப்பட்டன – கட்டுக்குள் வந்த கொரோனா

கொரோனா நோய்த் தொற்றால் உலகமே முடங்கியிருக்கிறது. கடந்த வருடம் டிசம்பரில் சீனாவில் தொடங்கிய இந்தப் பாதிப்பு உலகம் முழுவதும் பரவியது. வல்லரசு நாடுகளே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த திணறி வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து 232 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 54 லட்சத்து 30 ஆயிரத்து 552 நபர்கள்.

பாகிஸ்தானில் பள்ளிகள் திறக்கப்பட்டன – கட்டுக்குள் வந்த கொரோனா

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 18 ஆயிரத்து 792 பேர்.

சில நாடுகள் கொரோனா கட்டுப்படுத்தலில் முன்னெச்சரிக்கையோடு நடந்துகொண்டன. அவற்றில் பாகிஸ்தானும் ஒன்று.

இன்றைய தேதி வரையில் பாகிஸ்தானின் மொத்த பாதிப்பு 3,12,806 பேர். இவர்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் 2,97,497 பேர். சிகிச்சை பலன் அள்ளிக்காது இறந்தவர்கள் 6,484 பேர்.

பாகிஸ்தானில் பள்ளிகள் திறக்கப்பட்டன – கட்டுக்குள் வந்த கொரோனா

முடிக்கப்பட்ட கேஸ்களில் 98 சதவிகிதம் குண்மடைந்தும் இறப்பு விகிதம் 2 சதவிகிதமாகவும் உள்ளது. ஜூன் மாதத்தில் கொரோனா பரவலில் உச்சத்தில் இருந்த பாகிஸ்தானில் தற்போது கட்டுக்குள் இருக்கிறது.

ஜூலை 28 முதலே புதிய நோய் தொற்று எண்ணிக்கை 1000 க்குள் குறைந்துவிட்டது. தற்போது ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கையும் 9 ஆயிரத்திற்குள்தான் இருக்கிறது. இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. செப்டம்பர் மாதம் முழுவதுமே இறப்பவர்களின் எண்ணிக்கை 10க்குள் இருந்து வருகிறது.

பாகிஸ்தானில் பள்ளிகள் திறக்கப்பட்டன – கட்டுக்குள் வந்த கொரோனா

இதனால், பாகிஸ்தானில் நேற்று முதல் அனைத்து விதமான கல்வி நிலையங்களும் செயல்படத் தொடங்கின. ஆறு மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆயினும் முகக் கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது