பள்ளிகள் திறப்பு : அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று முக்கிய ஆலோசனை!

 

பள்ளிகள் திறப்பு : அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று முக்கிய ஆலோசனை!

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

பள்ளிகள் திறப்பு : அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் தொடக்கப்பள்ளி முதல் அனைத்து வகுப்புகளையும் திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு : அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று முக்கிய ஆலோசனை!

இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்துவது மற்றும் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள நிலையில் இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் , பள்ளிக்கல்வி இயக்குனர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.அத்துடன் செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.