கொரோனாவை தொடங்கி வைத்த சீன நகரில் பள்ளிகள் தொடக்கம்!

 

கொரோனாவை தொடங்கி வைத்த சீன நகரில் பள்ளிகள் தொடக்கம்!

கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என்று பிரித்து எழுதுமளவுக்கு பெரும் பாதிப்பை இந்த உலகிற்கு அளித்துக்கொண்டிருக்கிறது கொரோனா.

இன்றைய நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 59 லட்சத்து  741 பேர்.  கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 81  லட்சத்த்து 93 ஆயிரத்து 632 பேரைக் கடந்துள்ளது.

கொரோனாவை தொடங்கி வைத்த சீன நகரில் பள்ளிகள் தொடக்கம்!

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 61 ஆயிரத்து 251 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 68,45,858.  கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 62,57,571 பேரும், பிரேசில் நாட்டில்  39,52,790 பேரும் இந்தியாவில் 37,66,108 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொரோனாவை தொடங்கி வைத்த சீன நகரில் பள்ளிகள் தொடக்கம்!
PC: Twitter

இந்தக் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய இடம் சீனா நாட்டின் வுகான் நகரத்தில். அங்கிருந்துதான் பல நாடுகளும் பரவியது. அந்த நகரத்து மக்களில் பெரும்பாலோனருக்கு கொரோனா தொற்று பரவியது.

ஆனால், கடந்த மூன்று மாதங்களாக ஒட்டுமொத்த சீனாவிலுமே கொரோனா தாக்கம் குறைந்துவிட்டது. அதன் தலைநகரில் மாஸ்க் போடுவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கும் அளவுக்கு சூழல் மாறிவிட்டது.

கொரோனாவை தொடங்கி வைத்த சீன நகரில் பள்ளிகள் தொடக்கம்!
PC: Twitter

தற்போது கொரோனா தன் பயணத்தைத் தொடங்கிய வுகான் நகரில் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.  கடைத்தெரு, அலுவலகங்கள் இயங்குகின்றன.

சில கட்டுப்பாடுகளுடன் வுகான் நகரில் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்குள்ள அனைத்து நிலைப் பள்ளிகளும் தொடங்கப்பட்டன. மாணவர்களும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.