கொரோனாவுக்குப் பின் திறக்கும் பள்ளிகள் – யுனிசெஃப் வழிகாட்டுவது இப்படித்தான்

 

கொரோனாவுக்குப் பின் திறக்கும் பள்ளிகள் – யுனிசெஃப் வழிகாட்டுவது இப்படித்தான்

கொரோனா நோய்த் தொற்று மாபெரும் சிக்கலை உருவாக்கியிருப்பது பள்ளி மாணவர்களுக்குத்தான். தேர்வுகாலத்தில் தொடங்கிய நோய்த்தொற்றால் தேர்வுகள் எழுத முடியாமல் போயின. சுமார் 9 மாதங்கள் கல்வியிலிருந்து விலகியிருக்கிறார்கள் குழந்தைகள்.

நீண்டகாலம் குழந்தைகள் கல்வியிலிருந்து விலகியிருப்பது இடைநிற்றலை அதிகரிக்கும் என கல்வியாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் மூன்றாம் உலகநாடுகளில் தற்போதுதான் கல்வி என்பது அனைவருக்கும் பரவலாகிக் கொண்டிருக்கும் காலம் இது.

கொரோனாவுக்குப் பின் திறக்கும் பள்ளிகள் – யுனிசெஃப் வழிகாட்டுவது இப்படித்தான்

இடைநிற்றல் அதிகரித்தால் பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள், மலைவாழ் மக்கள், விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளே பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 53 லட்சத்து  86 ஆயிரத்து 928 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 77 லட்சத்து 08 ஆயிரத்து 719 நபர்கள்.   

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 50 ஆயிரத்து 592 பேர்.  

கொரோனாவுக்குப் பின் திறக்கும் பள்ளிகள் – யுனிசெஃப் வழிகாட்டுவது இப்படித்தான்

கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகளைத் திறக்க சில நாடுகள் முடிவெடுத்திருக்கின்றன. அமெரிக்காவில் திறக்க முடிவெடுத்தது. ஆனால், பள்ளி திறக்கப்பட்டதும் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளது.

இலங்கையில் இம்மாதம் 12-ம் தேதி முதலே குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கிவிட்டன. பிரிட்டனிலும் பள்ளிகள் திறக்கும் முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

இப்படி கொரோனாவால் மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை திறக்கும்போது கவனம் செலுத்த வேண்டியவை என யுனிசெஃப் சில வழிகாட்டல்களை அறிவுறுத்தியிருக்கிறது.

கொரோனாவுக்குப் பின் திறக்கும் பள்ளிகள் – யுனிசெஃப் வழிகாட்டுவது இப்படித்தான்

உலகம் முழுவதும் 153 நாடுகளில் ஏறத்தாழ 105 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்த105 நாடுகளில் கொரோனா நோய் வைரஸ் தொற்றால் மூடப்பட்டிருக்கும் பள்ளிகளில், 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளியை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளன.

பள்ளியை மீண்டும் திறக்கும்போது குழந்தைகளின் உடல்நிலை, பாதுகாப்பு அவசியம். அதனால், ஆசிரியர்கள், மாணவர்கள், இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் நலன் குறித்து தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

பள்ளிகளில் நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் இரண்டு இடங்களில் உள்ளன. ஒன்று, பள்ளி திறக்கும்போது, முடிவடையும்போது கூட்டமாக மாணவர்கள் கூடிப் பிரிவது.

கொரோனாவுக்குப் பின் திறக்கும் பள்ளிகள் – யுனிசெஃப் வழிகாட்டுவது இப்படித்தான்

இரண்டு, மதிய உணவின்போது எல்லா மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது போதும்.

இதற்கு ஒரே இடத்தில் வகுப்பறைகளை நடத்தாமல் திறந்த வெளியில் நடத்தலாம். மேலும், வகுப்பறையில் பாடம் நடத்துவதற்கான நேர அளவைக் குறைக்கலாம். அடுத்து, ஷிப்ட் முறையில் மாணவர்களைப் பள்ளிக்கு வர வழைக்கலாம்.

பள்ளியை மீண்டும் திறக்கையில் சுத்தமான தண்ணீரும் சுகாதார வசதிகளும் ஏற்பாடு செய்வது மிகவும் அவசியம். தனிமனித இடைவெளியைப் பேணுதல், கை கழுவும் வசதி, தூய்மையான பள்ளி போன்றவற்றை நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

கொரோனாவுக்குப் பின் திறக்கும் பள்ளிகள் – யுனிசெஃப் வழிகாட்டுவது இப்படித்தான்

ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி பள்ளியின் ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா கால சுகாதாரப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளது யுனிசெஃப்.

இது மட்டுமன்றி, கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்கும் சில வழிகாட்டல்களையும் அந்தந்த நாடுகளுக்கு சில அறிவுறுத்தல்களையும் யுனிசெஃப் முன் வைத்துள்ளது.

பள்ளிக்குத் திறக்கப்பட்டாலும் பாதுகாப்பு நடவடிக்கையோடு இருக்க வேண்டியது பெற்றோரின் கடமை. நோய்த் தொற்று சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் அதிகளவில் இருக்கிறது என்பது ஆபத்தான ஒரு விஷயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.