புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு!

 

புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரி மாநிலத்தில் இன்றுமுதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே பள்ளிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 10,12 ஆம் வகுப்புகளுக்கு 3 நாட்களும், 9, 11 ஆம் வகுப்புக்கு 3 நாட்களும் என வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும்.

புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு!

காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்கும் வகுப்புகளுக்கு மாணவர் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாட சந்தேகங்களை தீர்த்து கொள்ள வரும் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமரவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு!

கடந்த 6 மாத காலமாக கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் புதுச்சேரியில் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா அச்சம் இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவார்களா? புதுச்சேரி அரசின் முயற்சி கைகொடுக்குமா? என்பது விரைவில் தெரியவரும்.