அக்.5 முதல் வருகை பதிவேடு இன்றி புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு!

 

அக்.5 முதல் வருகை பதிவேடு இன்றி புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் போது வருகை பதிவேடு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் பல மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகள், வரும் 5ம் தேதி முதல் புதுச்சேரியில் திறக்கப்பட உள்ளன. 5ம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களும், 12ம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம் என புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது.

அக்.5 முதல் வருகை பதிவேடு இன்றி புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு!

அண்மையில் பள்ளிகள் திறப்பது குறித்து பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தனியார் பள்ளி மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் மாணவர்களை கட்டாயப்படுத்தி வரவழைக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன் படி, தற்போது மாணவர்களுக்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதுச்சேரியில் வரும் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும் போது வருகை பதிவேடு கிடையாது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 முதல் 7ம் தேதி வரை மாணவர்கள் இருக்கை மற்றும் பள்ளிகளை தயார் படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.