வாரத்தில் 5 நாட்கள்… பள்ளிக்கல்வித் துறையின் அதிரடி முடிவு!

 

வாரத்தில் 5 நாட்கள்… பள்ளிக்கல்வித் துறையின் அதிரடி முடிவு!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக எட்டு மாதங்களாகப் பள்ளிகள் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் மிக தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை ஈடுசெய்யும் விதமாக வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி பள்ளிகள் ஆறு நாட்கள் நடைபெற்றன.

வாரத்தில் 5 நாட்கள்… பள்ளிக்கல்வித் துறையின் அதிரடி முடிவு!

சனிக்கிழமையில் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் வேலை நாட்களைக் குறைக்க வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித் துறை பள்ளிகள் ஐந்து நாட்கள் செயல்பட அனுமதி அளித்திருக்கிறது. மேலும் பள்ளிகளில் நடத்தப்படும் 12ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகளில் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும். செய்முறைத் தேர்வு முடிந்தபின் மாணவர்களை வீட்டிலிருந்து பொதுத் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியிருக்கிறது.