ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்! மத்திய அரசு உத்தரவு

 

ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்! மத்திய அரசு உத்தரவு

கடந்த 8 மாதங்களுக்கு மேல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பதற்கு மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டினாலும், பள்ளிகளை திறந்துவிட அரசு முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தில் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், அதற்கு பெற்றோர் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. அதன்பின்னர் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதுடன், திரும்பவும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்! மத்திய அரசு உத்தரவு

இந்நிலையில் பொது தேர்வுக்காக 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களை தயார் செய்ய ஜனவரி 4ம் தேதி பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்த அமைப்பின் இயக்குநர் ஆராதோன், அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். மாணவர்கள் உரிய விளக்கங்களை பெறுவதற்கும், பிராஜெக்ட், பிராக்டிகல் செய்வதற்கும் பள்ளிகளை திறந்தால்தான் முடியும் என்றும் அதேநேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.