கொரோனா பரவல் எதிரொலி – புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

 

கொரோனா பரவல் எதிரொலி – புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.மேலும் சில மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இருப்பினும் புதுச்சேரியில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் அறிவித்தார்.

கொரோனா பரவல் எதிரொலி – புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பரவி வருவதால் மாணவர்களின் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை விடப்படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை பள்ளி விடுமுறை அறிவித்து ஆளுநர் தமிழிசை உத்தரவு பிறப்பித்துள்ளார்.