50% இருக்கைகளுடன் பள்ளிகள் இயங்கலாம் – மாணவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் வர அனுமதி

50% இருக்கைகளுடன் பள்ளிகள் இயங்கலாம் – மாணவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் வர அனுமதி

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டே இருப்பதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

50% இருக்கைகளுடன் பள்ளிகள் இயங்கலாம் – மாணவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் வர அனுமதி

இதையடுத்து பள்ளிகளை திறக்க இரு மாநில அரசும் முடிவெடுத்துள்ளன. தற்போது வரைக்கும் ஆன்லைன் கல்வியே மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நேரடி கல்விக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதனால் குஜராத்தில் வரும் 26 ஆம் தேதியில் இருந்து ஒன்பதாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகளை திறக்க குஜராத் அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதே போல் ராஜஸ்தான் மாநில அரசு வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்திருக்கிறது.

50% இருக்கைகளுடன் பள்ளிகள் இயங்கலாம் – மாணவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் வர அனுமதி

50 சதவிகித இருக்கைகளுடன் பள்ளிகள் இயங்கலாம் என்று அறிவித்துள்ளது. ஆன்லைன் பகுப்பில் பங்கேற்று வரும் மாணவர்கள் நேரடி வகுப்புகளில் பங்கேற்க விரும்பினால் பெற்றோரின் சம்மதத்துடன் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து விட்டது என்றாலும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் பள்ளிக்கு வரக்கூடாது. நேரடி படிப்பில் பங்கேற்க பெற்றோர்கள் சம்மதம் அளித்து அதன் பின்னரே பள்ளிக்கு வரவேண்டும். அதுவும் 50 சதவிகித இருக்கைகளுடன் தான் பள்ளி இயங்க வேண்டும் என்கிற அறிவுறுத்தலுடன் வரும் 26ம் தேதி முதல் குஜராத்தில் பள்ளிகள் இயங்க இருக்கின்றன.