“செப் 1 முதல் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு…” – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 

“செப் 1 முதல் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு…” – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் வருகின்ற செப் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பள்ளிகள் திறப்பை ஒட்டி ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அப்படி ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடப்படாவிட்டாலும் பள்ளிகள் திறக்கப்படாது என்றும அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“செப் 1 முதல் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு…” – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்நிலையில் தமிழ்நாட்டில் செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

*கூடுதல் வகுப்பறைகள் இல்லாவிட்டால் மீதமிருக்கும் மாணவர்களுக்கு மற்றொரு நாளில் வகுப்பு நடத்த வேண்டும்

*ஆசிரியர்கள் மாணவர்கள் ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்

*பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்

*வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும்

*ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே அமர வைக்க வேண்டும்

*மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகளை அறிவித்துள்ளது.