சென்னையில் பேருந்து கண்ணாடியை உடைத்த பள்ளி மாணவர்கள்!

 

சென்னையில் பேருந்து கண்ணாடியை உடைத்த பள்ளி மாணவர்கள்!

சென்னையில் அரசு பேருந்து கண்ணாடியை பள்ளி மாணவர்கள் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டு கிடந்த நிலையில் மீண்டும் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுமாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.மாணவர்களின் பயணத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கு சென்றுவர, பழைய பஸ் பாஸையே பயன்படுத்தி கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்தது.

சென்னையில் பேருந்து கண்ணாடியை உடைத்த பள்ளி மாணவர்கள்!

இந்நிலையில் சென்னை ஓட்டேரி அருகே மாநகர பேருந்து கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்த பள்ளி மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படியில் பயணம் செய்த 6 மாணவர்களை உள்ளே வருமாறு நடத்துநர் ராஜா கூறியதால் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உள்பட 6 பேரை காவல்நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

சென்னையில் பேருந்து கண்ணாடியை உடைத்த பள்ளி மாணவர்கள்!

கல்லூரி மாணவர்கள் தான் பஸ் டே உள்ளிட்ட கொண்டாட்டங்கள் செய்து அதனால் ஏற்படும் பிரச்னைகளால் அரசு பேருந்தை சேதப்படுத்துவர். இதை நாம் பலரும் நேரடியாக பார்த்திருக்கிறோம்; செய்திகளில் படித்திருக்கிறோம். இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. அந்த வகையில் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்தியுள்ளது பொதுமக்கள் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.