அடுத்த ஆண்டு தான் பள்ளி,கல்லூரிகள் திறப்பா? என்ன சொல்கிறார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர்!

 

அடுத்த ஆண்டு தான் பள்ளி,கல்லூரிகள் திறப்பா? என்ன சொல்கிறார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர்!

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படும் நிலையிலும், பள்ளிகளை திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சமீபத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல்கள் வெளியானது. ஆனால் பள்ளிக் கல்வித்துறை அதற்கு மறுப்பு தெரிவித்தது. இப்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பே கிடையாது என அமைச்சர்  தெரிவித்திருந்தார். எப்போது தான் பள்ளிகள் திறக்கப்படும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதே சூழல் தான் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நிலவுகிறது.

அடுத்த ஆண்டு தான் பள்ளி,கல்லூரிகள் திறப்பா? என்ன சொல்கிறார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர்!

இந்த நிலையில் நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தான் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மனித வள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். மேலும், ஆன்லைன் கல்வி மற்றும் தொலைக்காட்சி கல்வியையே தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த 15 நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகிறது.