“வைரஸோடு பழகியாச்சு -ஸ்கூல் பஸ் வந்தாச்சு”-இந்த நாட்டுல பள்ளி, கல்லூரிகள் திறந்தாச்சி!

“வைரஸோடு பழகியாச்சு -ஸ்கூல் பஸ் வந்தாச்சு”-இந்த நாட்டுல பள்ளி, கல்லூரிகள் திறந்தாச்சி!

கொரானா வைரசால் மூன்று மாதங்களுக்கு முன்பு கடுமையாக பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டில் இப்போது அந்த வைரஸோடு வாழ பழகி விட்டதால் அங்கு பள்ளி கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன .

“வைரஸோடு பழகியாச்சு -ஸ்கூல் பஸ் வந்தாச்சு”-இந்த நாட்டுல பள்ளி, கல்லூரிகள் திறந்தாச்சி!

இங்கிலாந்து நாட்டில் மூன்று மாதங்களுக்கு முன்னாள் கொரானா வைரஸ் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றது மேலும் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்தது ,அதுமட்டுமல்ல அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டு ,டாக்டர்களின் தீவிர முயற்சியால் தான் உயிரோடு வந்ததாகவும் ,மருத்துவர்கள் கடவுளுக்கு சமம் என்றும் அவர்களை புகழ்ந்தார் ,
இந்நிலையில் அங்கு கொரானாவின் தாக்கம் முழுமையாக முடியவில்லை ,பலர் இன்னும் பாதிப்புள்ளாகி தான் இருக்கிறார்கள் .இருந்தாலும் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் , அந்த நாட்டு சுகாதார துறையினர் அறிவுரையின் பேரில் கடந்த மாதம் ஸ்காட்லாந்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதில் பெரிய அளவில் பாதிப்பை மாணவர்களுக்கு ஏறப்படுத்தாததால் இப்போது இங்கிலாந்திலும் பள்ளிகளை திறக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்தது .
அதன்படி இன்று முதல் அங்கு பள்ளிகள் கல்லூரிகள் திறக்க முடிவு செய்து மாணவர்களுக்கு முக கவசம் ,சானிடைசர் உதவியோடும் ,வெப்ப பரிசோதனைகள் செய்தும் திறக்கப்பட்டுள்ளது .

“வைரஸோடு பழகியாச்சு -ஸ்கூல் பஸ் வந்தாச்சு”-இந்த நாட்டுல பள்ளி, கல்லூரிகள் திறந்தாச்சி!