பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15 ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் – அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15 ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் – அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. இதனிடையே நடத்தப்படாமல் இருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஜூன் மாதம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இதனிடையே நாடு முழுவதும் எப்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கேள்வி எழுந்த வண்ணம் இருக்கிறது.

பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15 ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் – அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

இந்நிலையில் நாடு முழுவதும் பள்ளிகளை திறப்பது குறித்து ஜூலை 15 ஆம் தேதிக்கு பிறகு தான் முடிவு செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு குறையாவிட்டால் தேர்வுகளை ஒத்திவைக்க ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.