தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்? அரசு மறுபரிசீலனை என தகவல்!

 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்? அரசு மறுபரிசீலனை என தகவல்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்? அரசு மறுபரிசீலனை என தகவல்!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி ரவிக்குமார, சீமான் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் வடமாநிலங்களில் தசரா பண்டிக்கைக்கு பிறகு கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் பள்ளிகள் திறந்தாலும் பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது சந்தேகம் தான்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்? அரசு மறுபரிசீலனை என தகவல்!

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்து வருவதாகவும், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டது கவனிக்கத்தக்கது.