“10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து டிசம்பரில் முடிவு” – செங்கோட்டையன்

 

“10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து டிசம்பரில் முடிவு” – செங்கோட்டையன்

ஈரோடு

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து வரும் டிசம்பர் மாதத்தில் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பாரியூரில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.

“10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து டிசம்பரில் முடிவு” – செங்கோட்டையன்

மேலும், நாட்டிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு, கலந்தாய்வு நடைபெறுவதாக கூறிய அவர், இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பிலும், 92 பேர் பி.டி.எஸ். படிப்பிலும் சேரும் வாய்ப்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், பட்டய கணக்காளர் பயிற்சிக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் விண்ணப்பம் பெற்று, ஜனவரியில் பயிற்சி தொடங்கப்படும் என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், இந்தாண்டு பிளஸ் +1 படிக்கும்போதே பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு பயிற்சிஅளிப்பது தொடர்பாக, தனியார் நிறுவனத்துடன் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.