4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு உதவித்தொகை – மத்திய அரசு

 

4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு உதவித்தொகை – மத்திய அரசு

அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பட்டியலின மாணவர்களுக்கு உதவும் பொருட்டு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், பட்டியலின மாணவர்கள் 11ஆம் வகுப்பு முதல் எந்த உயர்கல்வியையும் மத்திய அரசின் நிதியில் பயில முடியும். 10ம் வகுப்போடு படிப்பை கைவிடுவதை தடுக்கும் பொருட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. அண்மையில், இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கி வந்த நிதியை குறைத்ததால் லட்சக் கணக்கான மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும் என தகவல் வெளியானது.

4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு உதவித்தொகை – மத்திய அரசு

அதே போல, 14 மாநிலங்களில் இந்த திட்டம் நிறுத்தப்பட்டு வரும் நிலையில் இதனை வேறு விதமாக கையாள அரசு திட்டமிடப்பட்டது. அதாவது, ‘கமிட்டெட் லயாபிலிட்டி’ என்ற திட்டத்தின் படி மாநில அரசுகள் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கிய பின்னர், மத்திய அரசு அந்த பணத்தை மாநில அரசுகளுக்கு வழங்கி வந்தது. ஆனால், மாநில அரசுகள் வழங்கிய பணத்தை மத்திய அரசு வழங்காமல் இன்னும் நிலுவையில் வைத்திருக்கிறது.

இந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பட்டியலின மாணவர்களுக்கு ரூ.59,048 கோடி கல்வி உதவித் தொகையில் மத்திய அரசு ரூ.35,534 கோடி செலவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.