இலங்கை LPL போட்டிகளின் அட்டவணை வெளியீடு

 

இலங்கை LPL போட்டிகளின் அட்டவணை வெளியீடு

இந்த அண்டு எல்.பி.எல் போட்டிகள் இலங்கையில் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் இது ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது நவம்பர் 21-ம் தேதி எல்.பி.எல் போட்டி இலங்கையில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அது இன்னும் ஒத்தி வைக்கப்பட்டு 26-ம் தேதி தொடங்குகிறது.

இலங்கை LPL போட்டிகளின் அட்டவணை வெளியீடு

ஐந்து அணிகளாகப் பிரிந்து ஆடப்படும் போட்டிகள் பெரும்பாலும் மாலை நேரத்தில் நடப்பதாகவே திட்டமிட்டப்படுகிறது. கிட்டத்தட்ட ஐபிஎல் போட்டிகளைப் போலவேதான்.

ஐக்கிய அமீரகத்தில் போட்டிகளை நடத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அரசு இலங்கையிலேயே நடத்த அனுமதி கொடுத்து விட்டது. ஒரே மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடக்க வுள்ளது.

இலங்கை LPL போட்டிகளின் அட்டவணை வெளியீடு

எல்.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மதியம் 3.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் போட்டிகள் தொடங்குகின்றன. அநேக நாட்களில் இரண்டு போட்டிகள் நடக்கின்றன.

நவம்பர் 26 -ம் தேதி தொடங்கும் எல்.பி.எல் தொடரில் டிசம்பர் 10-ம் தேதி வரை லீக் போட்டிகளும், டிசம்பர் 13 மற்றும் 14 -ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், டிசம்பர் 18-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற விருக்கிறன.