பட்டியலினத்து தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? – கவிஞர் வைரமுத்து

பட்டியலினத்து தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? – கவிஞர் வைரமுத்து

ஊராட்சித் தலைவர் அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.

பட்டியலினத்து தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? – கவிஞர் வைரமுத்து

கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது கடலூர் தெற்கு திட்டை பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமரவைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுபோன்று சாதியை காரணம் காட்டி ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டதாக தெரிகிறது . இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஊராட்சி செயலாளர் சிந்துஜா மற்றும் வார்டு உறுப்பினர் சுகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில் வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? தலைவியாய்க் கூட அல்ல… மனுஷியாய் மதிக்க வேண்டாமா? என் வெட்கத்தில் துக்கம் குமிழியிடுகிறது. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று” என்று பதிவிட்டுள்ளார்.