“க்ரூப் ஸ்டெடின்னு கூப்பிட்டு போய் குழந்தையை கொடுத்துட்டியே”-பிறந்த குழந்தையை பிரிட்ஜில் மறைத்த மாணவி

 

“க்ரூப் ஸ்டெடின்னு கூப்பிட்டு போய் குழந்தையை கொடுத்துட்டியே”-பிறந்த குழந்தையை பிரிட்ஜில் மறைத்த மாணவி


ஒரு பள்ளி மாணவி அவரின் வகுப்பு தோழனால் கர்ப்பமானார் .பிறகு தனக்கு பிறந்த அந்த குழந்தையை அந்த மாணவி தன்னுடைய வீட்டு பிரிட்ஜில் ஒளித்து வைத்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது

“க்ரூப் ஸ்டெடின்னு கூப்பிட்டு போய் குழந்தையை கொடுத்துட்டியே”-பிறந்த குழந்தையை பிரிட்ஜில் மறைத்த மாணவி


ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரத்திற்கு அருகிலுள்ள வெர்க்-துலா கிராமத்தில் ஒரு 14 வயது பள்ளி சிறுமி திடீரென கர்ப்பமானார் .அவர்து கர்ப்பத்துக்கு காரணம் அவரோடு பள்ளியில் படிக்கும் ஓர் மாணவன் .இதனால் இந்த கர்ப்ப விஷயத்தை அந்த மாணவி தன்னுடைய வீட்டில் மறைத்து வந்தார் .அக்கம்பக்கத்தினர் அவரின் வீங்கிய வயிற்றை பார்த்து அவரிடம் இது பற்றி கேட்ட போது ,தான் திடீரென எடை போடுவதாக கூறி சமாளித்துள்ளார் .
ஆனால் பத்து மாதங்களுக்கு பிறகு அவர் ஒரு ஆண் குழந்தையை ரகசியமாக வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் பெற்றெடுத்தார் .பிறகு தன்னுடைய பெற்றோர் வெளியே போயிருக்கும் சமயத்தில் தனக்கு இப்படி குழந்தை பிறந்துள்ளதால் அந்த குழந்தையை அவர்களிடமிருந்து மறைக்க ஒரு திட்டம் தீட்டினார் .அதன் படி அந்தத் குழந்தையையே ஒரு பிளாஸ்டில் கவரில் சுற்றினார்.பின்னர் அந்த குழந்தையை பிரிட்ஜுக்குள் இருக்கும் பிரீசர் பெட்டியில் வைத்து விட்டு போய்விட்டார் .பிறகு அவரின் பெற்றோர் வீட்டிற்கு வந்த போது அவர் மயங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அவரை அருகிலுள்ள ஹாஸ்பிடலில் அப்பெண்டிக்ஸ் என்று சொல்லி சேர்த்தார்கள் .அங்கு அவரை சோதனை செய்த டாக்டர்கள் அவரை விசாரித்த போது ,தான் குழந்தை பிரசவித்து அந்த குழந்தையை வீட்டின் பிரிட்ஜில் ஒளித்து வைத்துள்ள விஷயத்தை சொல்லிவிட்டார் .

அதனால் டாக்டர்கள் அவரின் பெற்றோரிடம் இதை கூறினர் ,அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர் பிரிட்ஜிலிருந்து அந்த இறந்த நிலையிலிருந்த குழந்தையை மீட்டார்கள் .இப்போது அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சையிளிக்கப்பட்டு வருகிறது.

“க்ரூப் ஸ்டெடின்னு கூப்பிட்டு போய் குழந்தையை கொடுத்துட்டியே”-பிறந்த குழந்தையை பிரிட்ஜில் மறைத்த மாணவி