அரசுவேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – பாதிக்கப்பட்டோர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

 

அரசுவேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – பாதிக்கப்பட்டோர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

ஈரோடு

அரசுவேலை வாங்கித் தருவதாக கூறி, இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது, ஈரோடு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் திலகர் தெருவை சேர்ந்த திருமூர்த்தி மகன் ராஜு (29). இவர் இன்று ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து புகார் அனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில், எம்சிஏ படித்துள்ள அந்த இளைஞர் அரசுப்பணியில் சேர முயற்சித்து வந்ததாகவும், அப்போது அறிமுகமான ஈரோடு பூந்துறை ரோட்டை சேர்ந்த நபர், வருவாய் துறையில் இளநிலை உதவியாளர் பணி வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார்.

அரசுவேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – பாதிக்கப்பட்டோர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

இதற்காக, 3 லட்சம் ரூபாய் கேட்ட அந்த நபர் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டதாகவும், தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக சென்னைக்கு வரவழைத்து, மீதமுள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு, பணி நியமன உத்தரவை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அந்த நபர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், இதுகுறித்து ஆய்வுசெய்தபோது பணி நியமன உத்தரவு போலியானது என தெரியவந்ததாகவும் கூறியுள்ளார். எனவே தன்னை ஏமாற்றிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ராஜூவை போன்று பணத்தை இழந்த மேலும், 5 பேர் இன்று எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனால் 50 லட்சம் ரூபாய் வரை அந்த நபர் மோசடி செய்தது தெரியவந்தது.