தலைமை நீதிபதியை விமர்சித்து ட்வீட்… வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என அறித்தது உச்ச நீதிமன்றம்!

தலைமை நீதிபதியை விமர்சித்து ட்வீட்… வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என அறித்தது உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்து ட்வீட் வெளியிட்டது தொடர்பான வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தலைமை நீதிபதியை விமர்சித்து ட்வீட்… வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என அறித்தது உச்ச நீதிமன்றம்!
உச்ச நீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளை விமர்சித்து மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தலைமை நீதிபதி மிக விலை உயர்ந்த பைக்கில் அமர்ந்து புகைப்படம் எடுத்தது தொடர்பாக அவர் ட்வீட் செய்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

தலைமை நீதிபதியை விமர்சித்து ட்வீட்… வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என அறித்தது உச்ச நீதிமன்றம்!
தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பற்றி பிரஷாந்த் பூஷன் சர்ச்சைக்குரிய வகையில் இரண்டு ட்வீட்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று அறிவித்தது. அவருக்கான தண்டனை பற்றி வருகிற 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதியை விமர்சித்து ட்வீட்… வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என அறித்தது உச்ச நீதிமன்றம்!
இந்த வழக்கில் பிரஷாந்த் பூஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே, “இந்த இரண்டு ட்வீட்களும் உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான பதிவுகள் இல்லை. நீதிபதிகளின் தனிப்பட்ட திறன் அடிப்படையிலான பதிவுகள். அது நீதிமன்ற செயல்பாட்டை எப்படி பாதிக்கின்றன என்று கூறியிருந்தார். எனவே, இதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது” என்று கூறியிருந்தார்.
மேலும் பிரஷாந்த் பூஷன் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில், “நீதித் துறையைக் களங்கப்படுத்தும் நோக்கம் இல்லை. தலைமை நீதிபதி பாப்டே நிறுத்தி வைக்கப்பட்ட பைக் மீதுதான் அமர்ந்திருந்தார் என்பதை நான் கவனிக்காமல் தவறுதலாக ட்வீட்” செய்துவிட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் பிரஷாந்த் பூஷனின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்து அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு அபராதம் அல்லது ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படலாம். அல்லது இந்த இரண்டுமே வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.