வீடு திரும்பினார் ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி!

 

வீடு திரும்பினார் ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி!

உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து மும்பையில் கைதான ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வீடு திரும்பினார்.

மஹாராஷ்ட்ராவை சேர்ந்த இண்டீரியர் டிசைனரான அன்வை நாயக் தற்கொலை வழக்கில் ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 2019ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும் நாயக்கின் மகள் அளித்த புகாரின் பேரில் அர்னாப் நவம்பர் 4 ம் தேதி மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வீடு திரும்பினார் ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி!

இதனிடையே கைது நடவடிக்கையின்போது பெண் காவலர் ஒருவரை தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் அர்னாப் மற்றும் அவரது மனைவி, மகன், மேலும் 2 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி மனு தாக்கல் செய்தார். அப்போது அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதனால் அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அங்கு பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து அர்னாப் கோஸ்வாமி சற்றுமுன் வீடு திரும்பியுள்ளார்.