இடஒதுக்கீட்டால் வந்த பெரும் குழப்பம்… மார்ச் 15இல் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

இடஒதுக்கீட்டால் வந்த பெரும் குழப்பம்… மார்ச் 15இல் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பின்படி அனைத்து மாநிலங்களிலும் கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு என்பது 50 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், தமிழகம், மகாராஷ்டிரத்தில் மட்டும் அதைத் தாண்டிய இடஒதுக்கீடு வழங்கும் சிறப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது வரையிலும் தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுவருகின்றன.

இடஒதுக்கீட்டால் வந்த பெரும் குழப்பம்… மார்ச் 15இல் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
இடஒதுக்கீட்டால் வந்த பெரும் குழப்பம்… மார்ச் 15இல் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

இச்சூழலில் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இடஒதுக்கீடு வழங்க முந்தைய பாஜக அரசால் மசோதா கொண்டுவரப்பட்டது. அங்கு ஏற்கெனவே 52% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்ததால், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, 50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு பின்பற்றலாமா என்பது குறித்து அனைத்து மாநில அரசுகளும் மார்ச் 15ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கோரப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம், மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் விசாரணையில் இருப்பதால் கோரிக்கையை நிராகரிப்பதாகக் கூறியது. அதனால் மராத்தா வழக்கு முக்கியவத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. உத்தரகாண்ட் மாநில அரசு இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடுத்த ஒரு வழக்கில், “இடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இடஒதுக்கீட்டால் வந்த பெரும் குழப்பம்… மார்ச் 15இல் மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

நீண்ட நாளைய இந்தக் குழப்பத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டுக்கான தெளிவான வரையறை இல்லாததே காரணமாகக் கூறப்படுகிறது. இடஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் எந்தச் சரத்துகளும் இடம்பெறவில்லை என்பதே நீதித் துறையைச் சேர்ந்தவர்களின் வாதமாக இருக்கிறது. இதற்கு ஒரே வழி அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை என்று கூறி அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கருத்து கூறுகின்றனர்.