விடுபட்ட 10, 12ம் வகுப்பு தேர்வுகளை ஏன் ரத்து செய்யக்கூடாது? – சி.பி.எஸ்.இ-க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

 

விடுபட்ட 10, 12ம் வகுப்பு தேர்வுகளை ஏன் ரத்து செய்யக்கூடாது? – சி.பி.எஸ்.இ-க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு நடத்த முடியாமல் உள்ள விடுபட்ட பாடங்களுக்கான தேர்வை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று சி.பி.எஸ்.இ-க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் மாதம் அவசர கதியில் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. இதனால், 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. தெலங்கானா, தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், சி.பி.எஸ்.இ வருகிற ஜூலை மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

விடுபட்ட 10, 12ம் வகுப்பு தேர்வுகளை ஏன் ரத்து செய்யக்கூடாது? – சி.பி.எஸ்.இ-க்கு உச்ச நீதிமன்றம் கேள்விஇதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போதைய நிலையில் தேர்வை நடத்துவது சரியாக இருக்காது, தொற்று பரவ அதுவே காரணமாகிவிடும் என்று கூறப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “10 மற்றும் 12ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வை ரத்து செய்து, இன்டேர்னல் மதிப்பெண் அடிப்படையில் அந்த பாடங்களுக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக வருகிற செவ்வாய்க் கிழமை பதில் அளிக்க சி.பி.எஸ்.இ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.