எஸ்பிபி- இளையராஜா நட்பில் சாகாவரம் பெற்ற பாடல்கள்…

 

எஸ்பிபி- இளையராஜா நட்பில் சாகாவரம் பெற்ற பாடல்கள்…

திரையிசை பயணத்தை தொடங்குவதற்கு முன்பிருந்தே இளையராஜாவும்- எஸ்.பி.பியும் நெருங்கிய நண்பர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களின் நட்புக்கு 50 வயதாகிறது. ஆனால் அந்த நட்பினை வாரிசுகள் வந்த கெடுத்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இளையராஜா இசையமைப்பாளராக வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த நாட்களில் எஸ்.பி.பி பாடகராக வலம் வந்தார். எஸ்.பி.பி. மேடைச் கச்சேரிகள் நடத்தி சம்பாதிக்கும் பணத்தை வாய்ப்பு தேடும் தன் நண்பர்களுக்கு செலவிடுவாராம். அப்படி உருவான ஆழமான நட்பு.

எஸ்பிபி- இளையராஜா நட்பில் சாகாவரம் பெற்ற பாடல்கள்…

எஸ்பிபி நடத்தி வந்த இசைக்குழுவில் இளையராஜா, பாஸ்கர், மற்றும் கங்கை அமரன் இசையமைத்துள்ளனர். கச்சேரிகளுக்கான பல இடங்களுக்கு இளையராஜாவும்- எஸ்பிபியும் வாத்தியங்களுடன் அலைந்துள்ளனர். அதன் தொடர்ச்சிதான் திரைப்படங்களில் அவர்களின் வெற்றிப் பயணம்.

இவர்கள் இணையில் வந்த பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன. தன் நண்பனுக்கான இளையராஜா பல சாகாவரம் பெற்ற மெட்டுகளை எல்லாம் இசைத்துள்ளார். எஸ்.பி.பி பாட வேண்டும் என்பதற்காகவே ரெக்காடிங்குகளை நிறுத்தி வைத்த கதையெல்லாம் நடந்திருக்கிறது.

80 முதல் 90 வரையில் இவர்கள் உருவாக்கிய பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. எந்த ஒரு பாடலையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவிற்குக் கணக்கு வழக்கில்லாமல் புகழ்பெற்ற பாடல்களைக் கொடுத்துள்ளார்கள். எஸ்.பி.பி யின் முழு திறனையும் பயன்படுத்தியவர் இளையராஜாதான். பல வித்யாசமான குரல்களை அவரிடம் இருந்து பெற்றுள்ளார்.

எஸ்பிபி- இளையராஜா நட்பில் சாகாவரம் பெற்ற பாடல்கள்…

இளையராஜா இசையமைத்த அவரது 400 வது படமான நாயகன், 500 வது படமான அஞ்சலி, மணிரத்னத்துக்கு இறுதியாக இசையமைத்த தளபதி போன்ற படங்களின் வெற்றிகரமான மெட்டுக்கு எஸ்.பி.பி இல்லாமல் சாத்தியமில்லை. இப்படி சென்று கொண்டிருந்த நட்பு, மேடைக் கச்சேரிகளின் ராயல்டி பிரச்சினை காரணமாக சந்திக்கு வந்தது.

இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது என அனுப்பிய நோட்டீஸ் எஸ்.பி.பியை முதல்முதலில் தாக்கிய அம்பாக இருக்கலாம். அந்த சம்பவத்துக்கு பிறகு, இளையராஜா பாடலை இனி மேடைகளில் பாட போவதில்லை என்று எஸ்.பி.பி.அறிவித்தார். அது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அவருக்கும் ஆழமான துயர் தரும் விஷயமாக இருந்தது.

எஸ்பிபி- இளையராஜா நட்பில் சாகாவரம் பெற்ற பாடல்கள்…

அதன் பின்னர் ஒரு முறை, எஸ்.பி.பி நடுவராக கலந்து கொண்ட நிகழ்ச்சியில், ஒரு சிறுவன் , நினைவெல்லாம் நித்யா படத்தில் இருந்து ” ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்” பாடலை பாடினான். அதைக் கேட்ட எஸ்.பி.பி.அங்கேயே கண்ணீர் விட்டார். அந்த பாடல் உருவான விதத்தை பகிர்ந்து கொண்ட அவர், இளையராஜாவின் இசை ஆளுமையை அப்போது பாராட்டினார். நண்பர்களுக்குள் எழுந்த மனக்கசப்பு என்பது நினைவுகளை அசைபோட தடைபோடுமா என்ன ? அதுதான் எஸ்.பி.பி.