எஸ்பிபியின் உடல் நாளை காலை 11 மணிக்கு தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம்!

 

எஸ்பிபியின் உடல் நாளை காலை 11 மணிக்கு தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம்!

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 50 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு உயிரிழந்தார். ஆகஸ்டு 14 ஆம் தேதியிலிருந்து நிமோனியா காய்ச்சல் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் அவரின் இதய – சுவாச மண்டல செயலிழப்பு ஏற்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுமார் ஆண்டுகளாக திரை இசையில் சுமார் 40 ஆயிரம் பாடல்கள், பல ஆயிரம் மேடைக் கச்சேரிகள் சாதனை புரிந்துள்ளார் எஸ்பிபி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என சுமார் 16 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.

எஸ்பிபியின் உடல் நாளை காலை 11 மணிக்கு தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம்!

இந்நிலையில் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்ததையடுத்து அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இங்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து செங்குன்றம் தாமரைபாக்கம் பண்ணை வீட்டிற்கு எஸ்பிபியின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு நாளை காலை 11 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.