எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…! இனி பேங்க் வாசலையே மிதிக்க வேண்டாம்… வீட்லயே எல்லாத்தையும் பண்ணிக்கலாம்!

 

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…! இனி பேங்க் வாசலையே மிதிக்க வேண்டாம்… வீட்லயே எல்லாத்தையும் பண்ணிக்கலாம்!

ஒட்டுமொத்த உலகமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. தொழில்நுட்பங்கள் வளர வளர மக்களுக்கான சேவைகளும் டிஜிட்டல் வழியே நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறை முன்பிருந்தே இருந்தாலும், கொரோனா பரவலுக்குப் பின்பே வேகமெடுக்கிறது. பொது இடங்களில் கூட்டம் கூடுவது, தொற்று பரவல் என பல்வேறு காரணங்களால் டிஜிட்டல் வழி சேவையளிக்க நிறுவனங்கள் முனைப்பு காட்டிவருகின்றன. அதில் வங்கி சேவைகளும் அடக்கம். தற்போது அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்கள் வங்கி வாசலை மிதிக்காதவாறு சேவை வழங்கவே விரும்புகின்றன.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…! இனி பேங்க் வாசலையே மிதிக்க வேண்டாம்… வீட்லயே எல்லாத்தையும் பண்ணிக்கலாம்!

தற்போது எஸ்பிஐ வங்கி எட்டு விதமான சேவைகளை இணைய வழியாக அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே இணைய வழி பணப் பரிவர்த்தனை சேவை நாம் அறிந்த ஒன்றே. தற்போது செக் புக், ஏடிஎம் கார்டு ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது, யுபிஐ சேவை நிறுத்தம்/தொடக்கம், வருமான வரியை இணைய வழியாக செலுத்துதல், நம்முடைய வங்கி கணக்கில் நடைபெறும் பரிவர்த்தனைகளை தெரிந்துகொள்ளுவது, டெபாசிட் கணக்குகளைத் தொடங்குவது மற்றும் நிர்வகிப்பது, மின் கட்டணம் உள்ளிட்டவற்றை இணைய வழியாக செலுத்துதல் ஆகிய புதிய சேவைகளையும் அறிவித்துள்ளது. இவையனைத்துமே வங்கிகளுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே இணைய வாயிலாக நாம் செய்துகொள்ள முடியும்.

எஸ்பிஐ வங்கியின் இணைய சேவையைப் பெற வேண்டுமெனில் நாம் internet banking-இல் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதை எப்படி செய்வது?

1.onlinesbi.com என்ற இணையதள முகவரிக்குள் செல்ல வேண்டும். பின் New User Registration / Activation என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

2.அதில் கேட்கும் account number, CIF number, branch code, country, registered mobile number உள்ளிட்டவற்றில் பூர்த்தி செய்ய வேண்டும். இறுதியில் submit கொடுக்க வேண்டும்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…! இனி பேங்க் வாசலையே மிதிக்க வேண்டாம்… வீட்லயே எல்லாத்தையும் பண்ணிக்கலாம்!

3.இதைச் செய்த உடன் உங்கள் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP வரும். அதற்குப் பின் username, login password ஆகியவற்றை உங்களுக்குப் பிடித்தது போல தேர்வு செய்து கொள்ளுங்கள். இவற்றை தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். யாரும் கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்டை பதிய வேண்டும். அவ்வளவு தான் வேலை முடிந்தது. உங்களுக்கு என்ன சேவை வேண்டுமா அதனை internet banking மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

நான் இதெல்லாம் செய்துவிட்டேன். எனக்கு என்னுடைய பாஸ்வேர்ட் மற்றும் யூஸர்நேம் மறந்துவிட்டது என்றால், அதற்கும் வழி இருக்கிறது.

www.onlinesbi.com. என்ற முகவரிக்குச் செல்லுங்கள். Forgotten Login Password என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள். மீண்டும் அதில் கேட்கும் தகவல்களைப் பூர்த்தி செய்யுங்கள். அதன்பின் OTP வரும். அதைப் பதிந்த பின் உங்களுடைய பாஸ்வேர்டை reset செய்துகொள்ளலாம்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே…! இனி பேங்க் வாசலையே மிதிக்க வேண்டாம்… வீட்லயே எல்லாத்தையும் பண்ணிக்கலாம்!