எஸ்.பி.ஐ. லாபம் 4 மடங்கு அதிகரிப்பு…. 3 மாசத்தில் ரூ.3,581 கோடி லாபம் பார்த்த பாரத ஸ்டேட் வங்கி…

எஸ்.பி.ஐ. லாபம் 4 மடங்கு அதிகரிப்பு…. 3 மாசத்தில் ரூ.3,581 கோடி லாபம் பார்த்த பாரத ஸ்டேட் வங்கி…

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) கடந்த மார்ச் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் தனிப்பட்ட நிகர லாபம் 4 மடங்கு அதிகரித்து ரூ.3,581 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கி தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.838 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

எஸ்.பி.ஐ. லாபம் 4 மடங்கு அதிகரிப்பு…. 3 மாசத்தில் ரூ.3,581 கோடி லாபம் பார்த்த பாரத ஸ்டேட் வங்கி…

துணை நிறுவனங்களில் பங்கு விற்பனை வாயிலாக கிடைத்த ஒரு முறை லாபம் மற்றும் வாராக் கடன் அதிகரிப்பு குறைந்ததுதான் பாரத ஸ்டேட் வங்கியின் லாபம் அதிகரிப்பு முக்கிய காரணம். 2020 மார்ச் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் நிகர மொத்த வட்டி வருவாய் 0.8 சதவீதம் குறைந்து ரூ.22,766 கோடியாக குறைந்துள்ளது. கடந்த மார்ச் இறுதிநிலரப்படி, பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த வாராக் கடன் 7.53 சதவீதத்திலிருந்து 6.15 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 3.01 சதவீதத்தலிருந்து 2.23 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

எஸ்.பி.ஐ. லாபம் 4 மடங்கு அதிகரிப்பு…. 3 மாசத்தில் ரூ.3,581 கோடி லாபம் பார்த்த பாரத ஸ்டேட் வங்கி…

2019-20ம் நிதியாண்டில் (2019 ஏப்ரல்-2020 மார்ச்) பாரத ஸ்டேட் வங்கி இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக லாபமாக ரூ.14,488 கோடி ஈட்டியுள்ளது. 2018-19ம் நிதியாண்டில் பாரத ஸ்டேட் வங்கி லாபமாக ரூ.862 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.