அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்…. ரூ.1,200 கோடியை மீட்டு தருமாறு தீர்ப்பாயத்தில் எஸ்.பி.ஐ.. மனு தாக்கல்…

அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்…. ரூ.1,200 கோடியை மீட்டு தருமாறு தீர்ப்பாயத்தில் எஸ்.பி.ஐ.. மனு தாக்கல்…

பல வருடங்களுக்கு முன் இந்தியாவின் மெகா கோடீஸ்வராக விளங்கிய அனில் அம்பானியின் நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. ஏராளமான வங்கிகளில் கடனை வாங்கி தொழிலில் போட்டார். ஆனால் தொழிலில் அடி மேல் வாங்கியதால் வங்கிகளில் வாங்கிய கடனை அவரால் திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்…. ரூ.1,200 கோடியை மீட்டு தருமாறு தீர்ப்பாயத்தில் எஸ்.பி.ஐ.. மனு தாக்கல்…

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்பராடெல் ஆகிய நிறுவனங்களுக்கு கடன் வழங்கி இருந்தது. இதற்காக பாரத ஸ்டேட் வங்கிக்கு அனில் அம்பானி தனிநபர் உத்தரவாதம் வழங்கி இருந்தார். தற்போது அனில் அம்பானி நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்தாததால் அவர் கொடுத்த தனிநபர் உத்தரவாதமான ரூ.1,200 கோடியை மீட்டு தருமாறு தேதிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்தது.

அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்…. ரூ.1,200 கோடியை மீட்டு தருமாறு தீர்ப்பாயத்தில் எஸ்.பி.ஐ.. மனு தாக்கல்…

இதனையடுத்து எஸ்.பி.ஐ.யின் விண்ணப்பம் குறித்து ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி அனில் அம்பானிக்கு தீர்ப்பாயம் கடந்த வியாழக்கிழமையன்று காலஅவகாசம் அளித்தது. அனில் அம்பானியின் செய்தி தொடர்பாளர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விஷயம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றம் ரிலையன்ஸ் இன்ப்ராடெல் ஆகியவற்றால் பெறப்பட்ட நிறுவன கடனுடன் தொடர்புடையது. இது அம்பானியின் தனிப்பட்ட கடன் அல்ல என தெரிவித்து இருந்தார்.