கை கொடுத்த வட்டி வருவாய்… எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் லாபம் ரூ.393 கோடியாக உயர்வு

கை கொடுத்த வட்டி வருவாய்… எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் லாபம் ரூ.393 கோடியாக உயர்வு

எஸ்.பி.ஐ. வங்கியின் துணை நிறுவனம் எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ். அந்நிறுவனம் தனது 2020 ஜூன் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் வட்டி வருவாய் அமோக இருந்ததால் லாபம் அதிகரித்துள்ளது. வட்டி வருவாய் மட்டும் சுமார் 35 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கை கொடுத்த வட்டி வருவாய்… எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் லாபம் ரூ.393 கோடியாக உயர்வு

2020 ஜூன் காலாண்டில் எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ் நிகர லாபமாக ரூ.393 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 14 சதவீதம் அதிகமாகும். 2019 ஜூன் காலாண்டில் எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ் நிகர லாபமாக ரூ.346 கோடி ஈட்டியிருந்தது. கடந்த ஜூன் காலாண்டில் எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,196 கோடியாக குறைந்துள்ளது.

கை கொடுத்த வட்டி வருவாய்… எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் லாபம் ரூ.393 கோடியாக உயர்வு

இருப்பினும், எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் வட்டி வருவாய் 34.6 சதவீதம் அதிகரித்து ரூ.1,412 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த வாராக் கடன் 1.35 சதவீதமாக குறைந்துள்ளது.