”உஷாரய்யா உஷாரு – லாட்டரி பரிசுன்னு மெசேஜ் வந்தா உஷாரு!”- எச்சரிக்கும் எஸ்பிஐ வங்கி!

”உஷாரய்யா உஷாரு – லாட்டரி பரிசுன்னு மெசேஜ் வந்தா உஷாரு!”- எச்சரிக்கும் எஸ்பிஐ வங்கி!

உங்களுக்கு வங்கியின் லாட்டரி திட்டத்தில் பரிசு விழுந்திருக்கு என வாட்ஸ் அப் அழைப்பு அல்லது மெசேஜ் மூலமாக வரும் மோசடி தகவல்களை நம்ப வேண்டாம் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

”உஷாரய்யா உஷாரு – லாட்டரி பரிசுன்னு மெசேஜ் வந்தா உஷாரு!”- எச்சரிக்கும் எஸ்பிஐ வங்கி!

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து இத்தகைய மோசடி அரங்கேற்றப்படுவதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, வங்கி நடத்தும் லாட்டரி அல்லது சிறப்பு பரிசு திட்டத்தின் கீழ் தங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது என வாட்ஸ்அப் அழைப்பு அல்லது மெசேஜ் வழியாக தங்களை தொடர்பு கொண்டு பேசும் மோசடி நபர்களை நம்ப வேண்டாம் என்றும், அவர்கள் குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கூறினால் அதனை நம்ப வேண்டாம் என வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

”உஷாரய்யா உஷாரு – லாட்டரி பரிசுன்னு மெசேஜ் வந்தா உஷாரு!”- எச்சரிக்கும் எஸ்பிஐ வங்கி!

அத்தகைய பரிசு திட்டம் எதையும் வங்கி நடத்தவில்லை என்றும், அப்படி யாராவது தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களிடத்தில் தங்களின் தனிப்பட்ட மற்றும் வங்கி சார்ந்த எந்த ஒரு தகவலையும் அளித்துவிடவேண்டாம் என எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.

”உஷாரய்யா உஷாரு – லாட்டரி பரிசுன்னு மெசேஜ் வந்தா உஷாரு!”- எச்சரிக்கும் எஸ்பிஐ வங்கி!

மேலும் தனிப்பட்ட அல்லது கணக்கு தொடர்பான தகவல்களை கேட்டு, மின்னஞ்சல், எஸ்எம்எஸ், அழைப்பு, வாட்ஸ்அப் அழைப்பு மூலமாக வங்கி எப்போதும் தங்களை தொடர்பு கொள்ளாது என்பதை நினைவில் வைக்குமாறு வலியுறுத்தி உள்ள எஸ்பிஐ வங்கி, அத்தகைய மோசடி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

  • எஸ்.முத்துக்குமார்