ஏடிஎம் கொள்ளை : மேலும் ஒருவர் கைது!

 

ஏடிஎம் கொள்ளை : மேலும் ஒருவர் கைது!

சென்னையில் எஸ்பிஐ வங்கிகளை நோட்டமிட்டு நூதன முறையில் வடமாநில இளைஞர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் வடமாநிலத்தை சேர்ந்த அமீர், வீரேந்தர் உள்ளிட்ட சிலர் பல லட்சம் ரூபாயை கடந்த சில மாதங்களாக கொள்ளையடித்து வந்துள்ளனர்.எஸ்பிஐ வங்கியின் பணம் டெபாசிட் செய்யும் ஏடிஎம்கள் உள்ள இடங்களை கண்டறிந்து கொள்ளையடித்த கும்பல் சூளைமேடு, பாண்டிபஜார், ராமாபுரம் ,வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது.

ஏடிஎம் கொள்ளை : மேலும் ஒருவர் கைது!

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய தமிழக காவல்துறை ஹரியானாவிற்கு விரைந்தது. ஏற்கனவே கடந்த 23ஆம் தேதி அமீர் என்பவர் .ஹரியானாவில் கைதானார்
இதையடுத்து அமீரின் கூட்டாளி வீரேந்தர் நேற்று கைது செய்யப்பட்டார்,. கைதான நபர்களிடமிருந்து 3 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் ,அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இவர்கள் ஹரியானாவில் மாடமாளிகை, நிலம் என வசதியாக வாழ்ந்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏடிஎம் கொள்ளை : மேலும் ஒருவர் கைது!

இந்நிலையில் சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஹரியானாவின் கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மற்றொருவர் கைதாகியுள்ளார். இதனிடையே ஹரியானாவில் பிடிபட்ட ஏ.டி.எம். கொள்ளையன் வீரேந்தர் நீதிமன்ற காவலில் சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமீட்டுள்ளனர். அப்படி செய்யும் பட்சத்தில் கொள்ளை கும்பல் குறித்து கூடுதல் தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.