Home சினிமா கமலையே மன்னிப்பு கேட்க வைத்த பாலா! #பிக்பாஸ்4

கமலையே மன்னிப்பு கேட்க வைத்த பாலா! #பிக்பாஸ்4

சனிக்கிழமை எப்பிசோட் கமல் வந்து சில பஞ்சாயத்துகளை விசாரிக்கும். பல நாட்களில் வழவழ கொழகொழ என்று விசாரித்துவிட்டு கிளம்பிவிடுவார். அந்தப் பிரச்னை முடிந்ததா இல்லையா என்று வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல… ஆடியன்ஸ்க்குமே தெரியாது. ஆனால், அதில் ஒரு மாற்றம். நேற்றைய எப்பிசோட்டில் நேரடியாக சாட்டையை எடுத்துவிட்டார். நேரடியாகக் கேள்விகள்… முகச்சுளிப்புகள் பற்றி கவலைப்படாது விஷயத்தைப் பேசிவிட்டார். விளைவு பல பஞ்சாயத்துகளில் சின்ன வெளிச்சம் வந்தது. அவை என்னவென்பதை கட்டுரையில் பார்ப்போம்.

வியாழக்கிழமை தொடர்ச்சி

கேபி, சோம், ஆஜித், ரமேஷ் நால்வரும் உட்கார்ந்து ‘பிக்பாஸ் சாட்டை எடுத்து விளாசியதையே பேசிட்டு இருந்தார்கள். ‘நான் என்ன சொன்னாலும், சோம் இது அந்த டாஸ்க் இல்ல’னு சொல்லிட்டு இருந்தார்னு சோம் சொன்னார். ஆமா, எதை கேட்டாலும் 2010-ல அழகிய தமிழ் மகன் ஷோவில்னு ஆரம்பிச்சா அவர் என்னதான் சொல்வார்?

இன்னொரு பக்கம், இதெல்லாம் நம்மை விசாரிக்கிறதுதான்… டிவியில போட மாட்டாங்கனு அப்பாவியா சொல்லிட்டு இருந்தார் ரம்யா. ஓஹோ… இப்படி வேற நினைக்கிறீங்களான்னு அதையும் டெலிகாஸ்ட் செய்தார் பிக்கி.

விசாரிக்கும் அறைக்குள் நுழைந்தது அனிதா. ‘பேசவே டைம் கொடுக்க மாட்டேங்குறீங்க… ஸ்பேஸ் கொடுக்க மாட்டேங்குறீங்கன்னு எப்பவும் புலம்புவார் இல்லையா அனிதா… யாருமே இல்லாத அவ்வளவு பெரிய ஸ்பேஸைக் கொடுத்தார் பிக்கி. உள்ளே நுழைந்ததும் வித்தியாசமான ஒரு ரியாக்‌ஷனைக் கொடுத்தார் அனிதா. இதெல்லாம் தெரிஞ்சுதான் செய்றீங்களா அனிதா.

நிஷா எப்படி ’முழுமையான பங்களிப்பு’ என்ற வார்த்தையைப் பிடிச்சிகிட்டாரோ, அனிதா ‘மகிழ்ச்சி’ என்ற வார்த்தையைப் பிடிச்சிகிட்டார். மகிழ்வித்து மகிழ் என்ற சான்றோர் பழமொழிக்கு ஏற்ப என்று அடித்துவிட்டார். இடையில குறுக்கிட்ட, எனக்கு டைம் கொடுக்க மாட்டேங்குறீங்கன்னு சண்டைக்கு வந்துடுவார்ன்னு அமைதிகாத்தார் பிக்கி. அவராலே முடியாம, இன்னும் டைம் இருக்கா… பஸ்ஸர் வர வரை பேசணுமா… என அனிதா பேச முடியாமல் தவித்த அரிய கணங்கள் அவை. மற்றவங்களை விட ஓரளவு பரவாயில்லை என்பதால் பஸ்ஸர் அடித்து வெளியேற்றினார்.

வெள்ளிக்கிழமையில் உருப்படியாக ஏதும் இல்லை போல. அதனால் நேரடியாக, சனிக்கிழமை கமல் எப்பிசோட்டுக்கு தாவினார் பிக்கி.

கமல் என்ன டிரஸ் போட்டிருந்தாலும் ‘நல்லா இருக்கு’னு ஒரு பாராட்டை போட்டு விடுகிறார்கள் ஹவுஸ்மேட்ஸ். அவரும் பதிலுக்கு நீங்க சாப்பிட்டீங்களா என்று விசாரிப்பதுபோல , ‘உங்க ட்ரெஸூம் நல்லா இருக்குனு சொல்லிடுவார்.

நேரடியாகவே பஞ்சாயத்தை ஆரம்பித்தார். கால் செண்டர் டாஸ்க்கில் குரூப் குரூப்பாக ஆடினது ஏன்… இது தனியா ஆடும் கேம் என்பதை எத்தனை தடவைத்தான் திரும்ப திரும்ப சொல்றதுனு அலுத்துக்கொண்டார்.

கேபி – சோம், ‘என்னை நீ காப்பாத்து; உன்னை நான் காப்பாத்தறேனு சொல்லி வெச்சிகிட்டு ஆடின மாதிரிதான் எங்களுக்குத் தெரிஞ்சுது என ஆடியன்ஸின் மனசாட்சியாக ஒலித்தார் கமல்.

‘விட்டுக்கொடுக்கல சார்… எவிக்‌ஷனுக்கு போக வேண்டாம்னு வெச்சிட்டேன்’னு சோம் புது விளக்கம் சொல்ல, அயர்ச்சியானார் கமல். ‘அப்ப கொடுத்து விட்டீங்களா’னு கடுப்பானார்.

அர்ச்சனா – ஆஜித் கூட்டணியை லேசாக விசாரித்து போகட்டும் என விட்டார். நிஷாவை ஒரு பிடி பிடித்தார். ’மலேசியாவில் உங்களை மாதிரியே ஒருத்தர் பேசியிருக்கார். ஆயிரம் பேரை பேச்சில் கட்டிப்போட்டிருந்தார். பேர்கூட உங்க பேர் மாதிரிதான் வந்துச்சு’னு கலாய்த்து நிஷாவுக்கு குற்றவுணர்ச்சியைத் தூண்டினார். ரமேஷ் – நிஷாவுக்கு சூடான திட்டுகள் கிடைத்தன.

ஷனம்க்கு போன் பேசுவது விட்டுப்போச்சு இல்லையா… அதை சரி செய்வோம். அவரோடு யார் பேசுவது எனக் கேட்டபோது ஆரி கைத் தூக்கினார். இல்ல ரமேஷ் போகட்டும் என முடிவெடுத்தார்.

ஷனம்க்கு போன் செய்தார் ரமேஷ். ‘ஏன் பிக்பாஸ் வந்தீங்க’ ‘காலையில பல் வெளக்குனீங்களா?’ ‘என்ன பவுடர் போட்டுள்ளீர்?” என்பதுபோன்ற கேள்விகளாக இருந்ததும், பிக்கி கடுப்பாகி பஸ்ஸரை அழுத்தி, வெளியே போங்கன்னு வெறுப்பில் சொன்னார்.

இடைவெளிக்குப் பிறகு வந்த கமல், பாலா பஞ்சாயத்தைக் கையில் எடுத்தார். ‘இங்கே எல்லாம் வெளியில போட்டுக்க, வீட்டுக்குள் போட்டுக்க என இரண்டு செறுப்பு இருக்கு. முகத்துல அடிச்சிக்கனு பாலா கிட்ட மூணு செறுப்பு இருக்கு’னு குத்தலோடு பேச ஆரம்பித்து ரவுண்ட் கட்டினார் கமல்.

‘நீங்க செஞ்சது… ஷனமை அவமானப்படுத்த அல்ல… பயமுறுத்துனீங்க’ என்று மிகச் சரியாக அந்த விஷயத்தின் மையத்தை இல்ல… இல்ல மய்யத்தைப் பேசினார். ’குடும்ப வன்முறையைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லிக்கொடுக்கணுமா பாலாஜி… அதில் அதிகம் பாதிக்கப்பட்டது நீங்கள்தானே’ என பேசிட்டு இருந்தப்பயே பாலா பேச கையைத் தூக்கியதும் கடுப்பானார் கமல்.

பிக்பாஸ் வீட்டில் வன்முறை அளவு போய்டுமோ என்ற கவலை இருக்கு என எச்சரித்த அவர், ஷனம்க்கு நடந்ததற்கு ஏன் எவருமே எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என ஹவுஸ் மேட்ஸ்களை நொறுக்கினார்.

கேப்டன் ஷிப் டாஸ்க்கின்போது ஆரி மீது குறை சொல்லிட்டே இருந்தார் பாலா. அதற்காக பாலாவுக்கு ஒரு குறும்படம் போட்டார். அதில், பாலா மற்ற நில பவுல்களை தட்டிவிட்டது தெரிந்தது.

அந்த இடைவெளியில் ஷனம் போய் போய் என்னிடம் மன்னிப்பு கேள் எனக் கேட்டது பாவமாக இருந்தது. அதற்கு அவர் முடியாது என நழுவியது எரிச்சலே வந்தது.

என்ன செய்தாலும் நான் ஷனமிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ற பாலாவை என்ன செய்வது என குழம்பினார் கமல். மன்னிப்பு கேட்டுடுங்களேன் பாலா என்று கமல் வாய் விட்டு கேட்டு மறுத்தார். இனி, வேற வழி இல்லை என்று நினைத்த கமல், ஷனமிடம் தானே மன்னிப்பு கேட்டார். பதறிபோனார் ஷனம். அப்போது எழுந்த பாலா, ஷனமிடம் மன்னிப்பு கேட்க, அது முடிவுக்கு வந்தது.

சுதந்திரம், சுயமரியாதை எல்லாம் உங்களுக்கு மட்டுமல்ல… மற்றவங்களுக்கும் இருக்கு என புரிஞ்சுக்கோங்க பாலா… ஆரியிடம் கை நீட்டி பேசாதீங்கன்னு சொன்னீங்க… ஆனா, நீங்க கையை நீட்டி பேசும்போது அதைச் சுட்டிக்காட்டினால் கோவம் வருது’ என பாலாவுக்கு சுரீர்… சுரீர் என சாட்டை அடிகள் விழுந்தன.

எவிஷனலிருந்து காப்பாற்றும் பகுதி. கால் செண்டர் நடந்த பகுதியில் நாமினேஷனில் உள்ளவர்களை உட்காரச் சொன்னார். அங்கே லைட் எரிய வைத்து முதலில் ஆரியையும், அடுத்து ரம்யாவையும் காப்பாற்றினார்.

வெளியே கேபி, ஆஜித் இருவரும் ‘ரம்யா என்னா பண்ணினார் என அவர் தொடர்ந்து காப்பாற்றப்படுகிறார்?’எனக் கேட்டுக்கொண்டிருந்தார். ரம்யா ஆர்மிகாரர்கள் பார்த்தால் என்ன செய்வார்களோ?

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews