சாத்தான்குளம் விவகாரத்தில் தந்தை – மகன் இறப்பு ‘லாக்கப் டெத்’ இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி!

வணிகர்கள் போராட்டம் செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பென்னிக்ஸ் உயிரிழக்க, ஜெயராஜ் மருத்துவமனையில் பலியானார். போலீசாரின் தாக்குதலால் தான் இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் இந்த சம்பவத்திற்கு வியாபாரிகள் சங்கம் சார்பாக சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் கடையடைப்பு செய்து வணிகர்கள் போராட்டம் செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு உயிர் இருந்தால் மட்டுமே அதற்கு ‘லாக்கப் டெத்’ என்று பெயர். ஆனால் சாத்தான்குளம் விவகாரத்தில் தந்தை மகன் இருவருமே சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னரே இறந்துள்ளனர். இதனால் இது லாக்கப் டெத் என்று சொல்லப்படாது. ஆனாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டப்பட்ட காவலர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். அதுமட்டுமல்லாது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்து உள்ளது. இதை லாக்கப் டெத் என்று திமுக எம்பி கனிமொழி கூறுகிறார். ஆனால் அவர்களின் ஆட்சிக்காலத்தில் இரண்டு பேர் லாக்கப் டெத் சம்பவத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் அவர் இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தேர்தல் வாக்கு வங்கிக்காக தான் செயல்படுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!