சத்தியில் கிலோ ரூ.2,047-க்கு விற்பனையான மல்லிகைப் பூ – விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

சத்தியில் கிலோ ரூ.2,047-க்கு விற்பனையான மல்லிகைப் பூ – விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், அமாவாசை தினத்தையொட்டி மல்லிகை பூக்கள் கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

சத்தியில் கிலோ ரூ.2,047-க்கு விற்பனையான மல்லிகைப் பூ – விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் பனிப்பொழிவு காரணமாக, கடந்த சில நாட்களாக மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்தது. அத்துடன் இன்று அமாவாசை என்பதால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், பூக்களின் விலை அதிகரித்து விற்பனையானது.

சத்தியில் கிலோ ரூ.2,047-க்கு விற்பனையான மல்லிகைப் பூ – விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

அதிகபட்சமாக மல்லிகைப்பூ கிலோ 2 ஆயிரத்து 47 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் முல்லை கிலோ 760 ரூபாய்க்கும், காக்கடா கிலோ 750 ரூபாய்க்கும், செண்டு கிலோ 75 ரூபாய்க்கும் விற்பனையானது. ஜாதி முல்லை கிலோ 800 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 500 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்வால், சத்தியமங்கலம் பகுதி மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.